தூய்மையான கழிப்பறைகள் திட்ட நிகழ்வுகள்
நான் இந்த பகுதியில் கடந்த பத்து வருடமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
"நான் இந்த பகுதியில் கடந்த பத்து வருடமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். என் கணவரும் நானும் விவசாயக் கூலி தொழிலாளிகள். எங்களுடைய மிகக்குறைந்த வருமானத்தைக் கொண்டு ஒரு கழிப்பறையைக் கட்ட எங்களால் முடியவில்லை. என் குழந்தைகள் என் வீட்டின் அருகில் உள்ள திறந்த வெளியில் தான் தங்கள் காலைக்கடனை முடித்துக் கொள்வார்கள். என் கணவரும் பகல் பொழுதிலேயே அருகில் எங்காவது தன் கடன்களை முடித்துக் கொள்வார்.
ஆனால் பெண்ணாய் இருக்கும் காரணத்தால் என்னால் பகல் பொழுதில் வெளியே போக முடியாது. இரவு ஆனவுடன் மற்ற பெண்களை துணைக்கு அழைத்துக் கொண்டு தான் நான் செல்வேன். இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நிறைய அழுத்தங்கள் ஏற்பட்டு நான் துன்பத்துக்குள்ளானேன். இந்த சமயத்தில் தான் ஈஷா எங்கள் வீட்டிலேயே கழிப்பறைக் கட்டிக் கொள்ள உதவியது. இப்போது மிக உத்தரவாதத்தோடும் கவலையின்றியும் நாங்கள் இருக்கிறோம்.
நன்றி ஈஷா"
- என்.முத்துலட்சுமி (காந்தி காலனி, தொண்டாமுத்தூர் பகுதி)